தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பென்னாகரம் நிலையத்தின் சார்பாக தீமற்றும் மீட்பு வினாடி வினா போட்டி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பென்னாகரம் நிலையத்தின் சார்பாக தீமற்றும் மீட்பு வினாடி வினா போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமையாசிரியர் எல்லம்மாள் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு சந்தோஷம் மாணவர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கைகள் சார்பாக பல்வேறு கருத்துகளை வழங்கினார்.அலுவலர் ராஜ்குமார் அவர்கள் தீயணைப்பு துறை சார்ந்த தொலைபேசி எண்கள் குறித்து விளக்கினார்.
பின்பு நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் கணேஷ் ,சியாமளா கௌரி, ஜோதி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்