தூத்துக்குடி அருகே பிளஸ் டூ மாணவி பிரதீபா கொலை செய்யப்பட்டதை கண்டித்து யாதவம் செய்வோம் இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் – குற்றவாளிகளை கைது செய்யவிடில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்

தூத்துக்குடி அருகே பிளஸ்2 மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகக்கத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு அமைப்பினர்கள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக யாதவம் செய்வோம் இயக்கம் தமிழ்நாடு யாதவ் சங்கங்கள் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பிரதீபா படுகொலை கண்டித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் இதுபோல் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன்,செங்கல்பட்டு பிரவீன் சிந்தாமணி கண்ணன் உத்தங்குடி முருகன் வாசு ஆண்டி வீரபாண்டி செல்வம் ராமர் கார்த்தி சிந்தாமணி கார்த்தி கருப்பையா உசிலம்பட்டி லட்சுமணன் நடிகர் பிரபு மானாமதுரை பிரபாகர் சக்குடி ஹேமநாதன் சுரேஷ் கருத்த ராஜா உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் இது குறித்து ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில் குற்றவாளர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்றார்