
மதுரை அழகர் கோயில் சாலை, தமிழ்நாடு நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கை குழுவின் கருத்து கேட்பு கூட்டம் மதுரை வடக்கு தொகுதி தலைவர் நூர் முஹம்மது தலைமையில் சட்டமன்ற தேர்தலில் அறிக்கை குழுவின் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது .
தேர்தல் அறிக்கை குழுவின் பொறுப்பாளர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர், அசோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ,டெக்ஸ்டைல் சங்க நிர்வாகிகள், கட்டிடப் பொருட்கள் விற்பனை சங்க நிர்வாகிகள், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் செய்யதுபாபு, மாமன்ற உறுப்பினர்கள் முருகன். போஸ். 1ம் பகுதி அஜாரு உசேன் மற்றும் மகிளா காங்கிரஸ், நளினி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அறிக்கை குழுவின் பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் அசோகன்.
வெள்ளிக்கிழமை தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை என்பது அடுத்து வரும் ஆட்சியாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையான அறிக்கையாக அமையும் இது தேர்தலின் பொதுமக்களை ஈர்க்கும் ஒரு சக்தியாகவும் அமையும் என தெரிவித்தார்
