கிறித்துவ ஊழியர் ஐக்கிய சபை சார்பாக, கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் திருத்துவ போதகர்கள் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில், டி.இ.எல்.சி லுத்திரன் திருச்சபை வளாகத்தில் திரித்துவ போதகர்கள் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிறித்துவ ஊழியர் ஐக்கிய சபையின் போதகர்
பிஷப் ஜஸ்டின் ராஜா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் முகம்மது ஹரூன், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம், பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் போதகர் ஜான் பீட்டர், ஆகியோர் கலந்து கொண்டு விழா பேருரை வழங்கினர். இந்த விழாவின் வாயிலாக கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திருச்சபையை சேர்ந்த பேராயர்கள், போதகர்களுக்கு அவர்களின் ஊழியத்தை பாராட்டி பாராட்டு விழா பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது ஹரூன் அனைவரது மத்தியிலும் சிறப்புரையாற்றி, கட்சியின் சிறுபான்மைதுறை பிரிவு மாவட்ட துணை தலைவராக
கிறித்துவ ஊழியர் ஐக்கிய சபை போதகர்
பிஷப் ஜஸ்டின் ராஜாவை நியமிப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்று கொண்ட போதகர்
பிஷப் ஜஸ்டின் ராஜா தேவனின் கிருபையால் இந்த பதவி தன்னை தேடி வந்துள்ளது. மக்கள் பணியாற்ற தேவன் எனக்கு கட்டளையிட்டுள்ளதாக தான் இந்த நாளில் என்னுவதாக கூறி சிறப்பு வழிப்பாடு நடத்தினார். தொடர்ந்து தேவ வசனங்கள், தேவ பாடங்களை பாடி சிறப்பு ஜெப நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை குறிச்சி சர்க்கிள் தலைவர் முகம்மது இஸ்மாயில், மாநில துணை தலைவர் பஷீர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஸ், மற்றும் ரியாஸ், ராஜ், முகமது ஈசா, ஜெபராஜ், கேத்ரின், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.