
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம்
கரடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சுருளிஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சின்ன மாரியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலில்
நடைபெறவுள்ள மஹா அஷ்டபந்தன பிரதிஷ்ட கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் எடுக்கும் விழா நடைப்பெற்றது.
முன்னதாக கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றிற்கு வந்த கிராம மக்கள் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் ஊற்று தோண்டி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு
தீர்த்த குடத்தில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பின்னர் தீர்த்த குடங்களுக்கு மேள,தாளங்கள் முளங்கிட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்த குடங்களுடன் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பென்னேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து பம்பை வாத்தியத்துடன், தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்த கிராமமக்கள் தேவர்முக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள
குல தெய்வத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்து சுரளிஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சின்ன மாரியம்மன், மற்றும் பெரிய மாரியம்மன் திருக்கோவில் நடைப்பெற்று வரும்
யாகசால பூஜையில் வைத்து யாகப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது,
இதனைத் தொடர்ந்து அம்மன் சிலைக்கு பிரதிஷ்டை மற்றும் மஹா குப்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சுருளிஅள்ளி ஊர் பொதுமக்கள், ஊர் கவுண்டர்கள், மற்றும் முக்குளம் ஒப்பிலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த தர்மகர்த்தாக்கள், ஊர் கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள் உள்ளிட்ட கிராம மக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
