
Swiggy,Zomato,Blink it போன்ற நிறுவனங்களால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் இந்த நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.கோவை சிவானந்த காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ரத்தினபுரி கிளையின் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் அந்தப் பேரவையின் மாநில தலைவர் டைமன் ராஜா கலந்து கொண்டு வணிகர்களை வாழ்த்தி கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமன் ராஜா:-
வருகின்ற மே 5-ம் தேதி சென்னை அருகே மறைமலைநகர் பகுதியில் 43-வது வணிகர் சங்கம் பேரவை மாநாடு நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் தற்போது சில கட்டுப்பாடுகள் தளர்த்துள்ளது வணிகர்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தார்.வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் டீக்கடை மற்றும் டிபன் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை பயன்படுத்தி தனியார் சிலிண்டர் நிறுவனங்கள் இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு விற்கக்கூடிய சிலிண்டர்களை 5,000 முதல் 6,000 விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.தமிழகத்தில் போதை பொருள் மற்றும் கஞ்சா நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது ஆனால் பள்ளிக்கூடங்களில் இருக்கும் பகுதியில் 100 மீட்டர் தாண்டி பீடி சிகரெட் விற்பனை செய்தால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து தேச விரோதி போல் வணிகர்களை கொடுமை செய்து வருவதாகவும் இதனால் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் ஒருவர் தற்கொலை செய்து செய்து கொண்டார்.இது குறித்து அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.கொரோனா காலகட்டங்களில் Flipkart, Amazon போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் விநியோகத்தை ரத்து செய்து நிலையில் வணிகர்கள் தான் பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்தார்கள்.அப்போது இறந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.Swiggy,Zomato,Blink it போன்ற நிறுவனங்களால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் இந்த நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் இதனால் சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை என்று வேதனை தெரிவித்தனர்.எந்த அரசியல் கட்சி வணிகர்களின் கோரிக்கை நிறைவேற்றுகிறதோ அந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினர்.
