
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி. கே. எம். தமிழ்குமரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார் .
பென்னாகரம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரேமலதாபேசியதாவது
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் கூட்டணி. ஜி.கே மணி எம்எல்ஏவின் புதல்வர் தமிழ்குமரன். இவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். படித்தவர்,நல்ல வேட்பாளர், கடந்த முறை ஜி.கே மணி எம்.எல்.ஏ ஜெயித்து சிறப்பாக பணியாற்றியுள்ளார். அந்தப் பணியினை ஜி.கே.எம்தமிழ்குமரன் தொடர்வார். பென்னாகரம் ஜாதி மதம் வேறுபாடு இல்லாத ஒற்றுமையான தொகுதி. அனைவரும் ஒரே சகோதரராக அண்ணன் தம்பியாக வாழக்கூடிய தொகுதி . பென்னாகரம் மிக சவாலான தொகுதி . பென்னகரத்தின் கவுரவம் உங்கள் ஓட்டில் உள்ளது . ஜி.கே .எம் தமிழ் குமரன் பென்னாகரத்தில் தங்கி மக்கள் பணி செய்வார் . பென்னாகரம் தொகுதி மக்கள் புலம்ப வேண்டாம் . ஜி..கே .எம் தமிழ் குமரன் வெற்றி பெற்றால் இங்கேயே தங்கி மக்கள் பணி செய்வார் . தேர்தலில் ஜாதி, மதம் பாகுபாடு வேண்டாம். ஜி .கே .எம் தமிழ்குமரன் வெற்றி பெற்றால் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை கொண்டு வருவார்.இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவு படுத்தப்படும் . ஒகேனக்கல் உபரி திட்டத்தின் மூலம் விவசாயம் மேம்படும் . இரண்டாவது முறையாக மு .க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார். 7வதுமுறையாக திமுக மறுபடியும் ஆட்சி அமைக்கும். பென்னாகரம் தொகுதி வெற்றி தொகுதி சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் . பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்ற உள்ளது .மாதம்தோறும் 2000 உரிமைத் தொகை எல்லா பெண்களுக்கும் வழங்கப்படும். மாணவர்களுக்கு லேப்டாப், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு | விவசாயிகள், மீனவர்கள், பெண்களுக்கு எனஎல்லா வாக்குறுதிகளும் திமுக அரசால் நிறைவேற்றப்படும் என்ன பேசினார் .
