தமிழ்நாடு குழந்தைகள் தேசிய அளவிலான அழகிப்போட்டி கேரள மாநிலத்தில் நடைபெற்ற நிலையில், கோவையை சேர்ந்த, ரக்ஷன் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுடன், சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேமாதம், 7, 8,மற்றும் 9 ஆகிய தேதிகளில் கேரளாவில் காலிகட் நகரில் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான அழகு போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திறமையான குழந்தைகள் பங்கேற்றனர். முன்னதாக கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, கோவில்பட்டி, மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தமிழ்நாடு ஸ்டேட் டைரக்டர் எம் சிவக்குமார் தலைமையில் ஆடிஷன்கள் நடத்தப்பட்டு இறுதிப் போட்டிக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர் இதில் கோவையை சேர்ந்த,
எஸ். ரக்ஷன்
ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் 1வது ரன்னர் அப் 2026,
தமிழ் ஃபேஷன் சாகா இந்தியா 1வது ரன்னர் அப் 2026,
ஃபேஷன் ஜூம் சவுத் இந்தியன் பியூட்டி ஐகான் 1வது ரன்னர் அப் 2026,
ஐஎஃப்இ பெஸ்ட் சூப்பர் மாடல் 2026,
பிரின்ஸ் பேர்ல் ஐகான் ஆஃப் இந்தியா,
ஃபேஷன் ஸ்டார்ட்
சன் இன்ஸ்டிடியூட்
சிறந்த கேட்வாக் விருது ஆகியவை வழங்கப்பட்டது மேலும் இந்த வெற்றியாளர்கள் அனைவரும் , ஆகிய தேதிகளில் தாய்லாந்தில் நடைபெற்றுள்ள ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் 2026 உலகளாவிய இறுதிப்போட்டியில் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக பிரதிநிதித்துவமாக தகுதி பெற்றுள்ளனர் இந்த வெற்றி குறித்து இவரது தந்தை கோவை பந்தயசாலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும், அந்த அளவில் தனது மகன் சிறந்த கேட் வால்க் செய்வதில் தனித்துவமான திறமைமை வெளிக்காட்டி வருகின்றார். இதற்க்கு பெற்றோர்களாகிய நாங்கள் முடிந்த அளவுக்கு ஆதரவை அளித்து வருகின்றோம் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.