
கோவை மாவட்டம் காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் தன்யா – 35.
இவரது கணவர் பெயர் கருணாநிதி. இவர் புகைப்பட தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் இன்று கணவன் மனைவி இருவரும் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கணவன் மனைவி இருவரும் கூறியதாவது..
எங்களுக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், சுய தொழில் செய்ய வேண்டும் என கூறி, கடந்த 2022ம் ஆண்டு தனது நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். இதனை திரும்ப செலுத்த முடியாததால் நண்பர்கள் என்மீது காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் தன் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்காக நீதிமன்ற பிணையும் நான் பெற்றுள்ளேன். இந்த நிலையில் எனது சூல்நிலையை புரிந்து கொண்ட, மசக்காளிபாளையத்தை சேர்ந்த திமுக மகளீரணி நிர்வாகி கலைச்செல்வி – 35
வடவள்ளியை சேர்ந்த திமுக நிர்வாகி சங்கீதா 35.
ஆனைமலையை சேர்ந்த சந்தியா 27.
இவர்கள் மூவரும் என்னிடம் நன்றாக தோழி யாக பழகி தனது சூல்நிலையை வைத்து, தன்னிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டி வருகின்றதாகவும், இவர்களுடன் மணிகண்டன் என்ற நபரும் சேர்ந்து கொண்டு 2022ம் ஆண்டு என்மீது பதிய பட்டுள்ள வழக்கை எனது புகைபடத்துடன் இணைத்து தினசரி நாழிதலில் விளம்பரப்படுத்தி என்னை அசிங்க படுத்துகின்றனர். மேலும் நேற்று இவர்கள் நாண்கு பேரும் சேர்ந்து எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணம் கேட்டு மிரட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். எங்களுக்கு பணம் கொடு இல்லை என்றால் நாங்கள் கூறுகின்ற நபருடன் உல்லாசமாக இரு எங்களுக்கு எதாவது ஒன்று தேவை என மிரட்டி வருகின்றனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
