
தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பாக நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பாக, வரும் 24ம் தேதி கோவை கேஎன்ஜி புதூர் பகுதியில் உள்ள, மகேஷ்வரி பவன் எனும் இடத்தில், மாபெரும் செயற்கை கால் அளவீட்டு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர பலகை வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முகாம் ஒருங்கிணைப்பாளர் அச்சால் சிங் பட்டீ மற்றும் சமூக செயற்பாட்டாளர் சந்தோஷ் முந்த்ரா ஆகியோர் கூறியதாவது..
கோவையில் இரண்டாவது முறையாக இந்த முகாமினை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சுமார் 650க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் செயற்கை கால், மருத்துவ உதவிகள், மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாட்டில் உள்ள தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்க படும் செயற்கை கால்களுக்கான அளவீட்டு முகாமாக நடைபெற உள்ளது என்றார். காலை 8 மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும் இந்த மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் எனவும், இந்த முகாம் செயற்கை கால்கள் வழங்குவதற்காக மட்டுமின்றி, நவீன மறுவாழ்வு தொழில்நுட்பத்தின் மூலம் மாற்று திறனாளிகளின் வாழ்வில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என தெரிவித்தார். இங்கு இலகுரக நெகிழ்வான, உடலமைப்புக்கு ஏற்ற வகையில் 3டி பிரிண்டடு நாராயண் மாடுலர் செயற்கை கால்களாக டிஜிட்டல் அளவீடுகள் மேற்கொள்ள பட உள்ளது என்றார். பாரம்பரிய செயற்கை கால்களை விட இவை வசதியானதும், நீடித்த பயன்பாட்டிற்க்கும் ஏற்றவையாக இருக்கும். இதனால் மாற்று திறனாளிகள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வழி வகை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். அளவீட்டு செயல் முறைக்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர், செயற்கை கால்கள் பயனாளிகளுக்கு வழங்க படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் டி. எம். படேல் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் ஹரிஸ் பாய் பட்டேல், அச்சால் சிங் பட்டீ,
சந்தோஷ் முந்த்ரா, கமல் கிஷோர் அகர்வால், ஜிதேந்திரா புகாலியா, ராஜேஷ் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
