தென் மண்டல தி.மு.க செயல்வீரர்களில் முக்கியமானவர் அன்புச் சகோதரர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ:ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

அடிமை எடப்பாடி அணியினருக்கு சிம்ம சொப்பனம் எனவும் பேச்சு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தென்மாவட்ட தி.மு.க செயல்வீரர்களில் முக்கியமானவர் என பேசினார்‌.

ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அருகே உள்ள புல்லங்குடி மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 738.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி,50.712 பயனாளாகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேரூரையாற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வறண்ட மாவட்டம் என்று முன்னர் பெயர் இருந்தது.தற்போது தி‌.மு.க அரசு பொறுப்பேற்றதும் நலத்திட்டங்களை மழையாக பெய்யச் செய்து வறண்ட பூமியை பசுமைப் பூங்காவாக மாற்றி வருகிறோம்.ஜாதி,மத பேதமின்றி தமிழகத்தில் மது நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ராமநாதபுரம் மாவட்டம்.இந்த மாவட்டத்தில் தி.மு.கழக மாவட்ட செயலாளராகவும்,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்க கூடிய அன்புச் சகோதரர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தென்மண்டல தி.மு.க மாவட்ட செயலாளர்களில் முக்கியமானவர்.கழகத்தின் மூத்த முன்னோடியான காதர்பாட்சா வெள்ளைச்சாமியின் அருமை மகனாகவும் இருக்கிறார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.கவை வெற்றி பெறச் செய்தவர்.ஜாதி,மத பாகுபாட்டை கடந்து திராவிட மாடல் அரசுக்கான கொள்கைகளை பின்பற்றுபவர்.அவதூறு விமர்சனங்களை முறியடித்து மாவட்டத்தில் கழக பணிகளை தடையின்றி கொண்டு செல்பவர்.சனாதனத்தை வேரறுத்து திராவிட சித்தார்ந்தத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்பவர்.இந்த அரசு விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது அவருக்கு கழக அரசின் மீதான பற்றை வெளிப்படுத்துகிறது

.ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு அடிப்பிராமணம் எழுதிக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர்.எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி வாகை சூடும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது‌.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை பல்வேறு தரப்பு மக்களின் தேவையை அறிந்து சட்டமன்றத்தில் கேட்டுப் பெற்றவர் அன்புச் சகோதரர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ‌ அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்ற அவருக்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முறையான அங்கீகாரம் திமுக அரசு வழங்கும்.கழக அரசின் நலனை கருத்தில் கொண்டு திராவிட பேரியக்கத்தின் கொள்கைகளை மக்களிடையே எடுத்து செல்வதில் வல்லவராகவும் திகழ்கிறார்.கிட்டத்தட்ட அரை மணி விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 முறைக்கும் மேலாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பெயரை உச்சரித்து பேசியதும் அங்கு குடியிருந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கரவோசை எழுப்பி உற்சாகமடைந்தனர்.தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் தி.மு.கவின் கோட்டை.இங்கு சனாதன சங்கிகளின் கொள்கைகளும்,ஏமாற்று நாடகங்களும் பலிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,தங்கம் தென்னரசு,கே.ஆர்.பெரியகருப்பன்,ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி,சட்டமன்ற உறுப்பினர்கள் செ.முருகேசன் (பரமக்குடி),இராம.கருமாணிக்கம் (திருவாடானை),ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.