திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ஊராட்சியில் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, நாம நிர்வாக அலுவலகம், நியாய விலை கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், புதுப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம்,அப்பகுதியில் இயங்கிய சந்தை இந்த பகுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கன்வாடி மையத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்
ஆய்வு மேற்கொண்ட போது அங்கன்வாடி குழந்தைகளிடம் அமர்ந்து நலம் விசாரித்தார்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகளிடம் சத்துணவு உண்டை மற்றும் முட்டை கொடுக்கிறார்களா எனவும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து ஒரு குழந்தையிடம் திருக்குறள் கூறும்படி கூறினார் சற்றும் எதிர்பார்க்காத குழந்தை திருக்குறள்களை சொல்லி அசத்தியது இதனால் வியந்து போன மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் எல்லாரும் கைதட்டுங்கப்பா என கூறி அந்த குழந்தையை பாராட்டி சென்றார்.

மேலும் கால்நடை மருத்துவமனை. மகளிர் சுய உதவி குழு கடன்கள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ள கேட்டு அறிந்து. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் வயதான 75 வயது வயதான மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு உத்தரவிட்டார் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில் சில அதிகாரிகளுக்கு டோஷ் விட்டார்.
இந்த ஆய்வின்போது நாட்றம்பள்ளி வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் மற்றும் 10 கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
