உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் வனப்பகுதியில் எம் எல் ஏ கஜேந்திரன் மரக்கன்று நடும் விழா.

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மக்களிடையே விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையால் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாற்றம், வன அழிப்பு, பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற சவால்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. இதனை வலியுறுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம் மற்றும் தூய்மைப் பணிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும். மரங்களை வளர்த்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் உலக சுற்றுசூழல் தினவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன்,மரக்கன்றுகளை நட்டுவதைத்தனர்.
ஒகேனக்கல் வனச்சரகர் சிவக்குமார், பென்னாகரம் வனச்சரகர் ராஜ்குமார், ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினர்.மற்றும் இந்த நிகழ்வில் தர்மபுரி மாவட்ட அதியமான் டிம்பர் மற்றும் ஷாமில் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் வனத்துறை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.