மில்லத் 131-வது பிறந்தநாள் விழா: திருப்பத்தூரில் புதிய நகர கழக அலுவலகம் திறப்பு, கொடியேற்ற நிகழ்ச்சி

திருப்பத்தூர் நகரில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயீல் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய நகர கழக அலுவலக திறப்பு மற்றும் கொடியேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பத்தூர் நகர பொருளாளர் முஹம்மத் சித்திக் அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் மத்திய நகர செயலாளர் அச்சுதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

.மேலும், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சையத் பாரூக் பாஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் தலைமையிலும், திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சி. முனுசாமி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என். திருப்பதி ஆகியோரின் ஆலோசனையின்படியும் இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.