பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி பலி…வனத்துறை சார்பாக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி பென்னாகரம் எம்எல்ஏ கஜேந்திரன் வழங்கினார்…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜன் வயது 70 விவசாயி. இவர் 16.1.2026-ம் தேதி இரவு பென்னாகரம் வனச்சரகத்தை ஒட்டி உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியில் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். மேலும் நிலத்தில் அவரை பயிரிட்டுள்ளார். அவரை உள்ளிட்ட பயிர்கள் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்கான நிலத்தில் குடிசை அமைத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது நிலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு காட்டு யானை ஒன்று மகாராஜன் இரவு காவலில் இருந்த குடிசையை தாக்கி அதனுள் இருந்த மகாராஜனை ஒற்றை யானை தாக்கியுள்ளது . இதில் மகாராஜன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் இந்த நிலையில் இன்று காலை வழக்கமான விவசாய பணிக்கு சென்ற விவசாயிகள் மகாராஜன் இரவு காவலுக்கு பயன்படுத்திய குடிசை சேதம் அடைந்து மகாராஜன் இறந்த கிடப்பதை பார்த்தனர்.

உடனடியாக உறவினர்களுக்கும் பென்னாகரம் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு மகாராஜன் யானை தாக்கி இறந்த கிடந்தார். பின்னர் மகாராஜன் உடலை மீட்டனர். பென்னாகரம் வனத்துறையினர் ஒகேனக்கல் போலீசிற்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர். உயிரிழந்த மகாராஜனுக்கு மணிமேகலை என்ற மனைவியும் மாதையன் என்ற மகனும் உள்ளனர் முதல் கட்டமாக மகாராஜன் ஈமச்சடங்கிற்கு வனத்துறை சார்பாக ரூபாய் 50,000 அன்றே கொடுக்கப்பட்டது.

தற்பொழுது தமிழக அரசு உத்தரவுப்படி வனத்துறை சார்பாக மகராஜனின் குடும்ப நிதி உதவியாக ரூபாய் 9 லட்சத்து 50 ஆயிரம் பெண்ணாகரம் வனச்சரகர் ராஜ்குமார் தலைமையில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வனத்துறையினர் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.