பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கோ. புதூர் ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்

மதுரை மாநகர் கோ.புதூர் பகுதியில் உள்ள பி.க.நக டிரஸ்ட்க்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் உப கோவிலான பழமையான ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேத்துக்கான பணிகள் நடைபெற்றது.

தொடர்ந்து மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பி.க.ந.க டிரஸ்ட் நடப்பு காரியக்காரர்கள் ராமசாமிசெட்டியார் (கோனாபட்டு) கண்ணன்செட்டியார் (அரிமளம்) ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கல இசையுடன் கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லட்சுமி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளை தொடர்ந்து புனித நீரானது கோபுர கலசத்திற்கு ஊற்றபட்டு பிரதிஷ்டை செய்யப்படடது. தொடர்ந்து விநாயகர்க்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பக விநாயகரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பி.க.நக டிரஸ்டி மற்றும் விழாக் குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.