திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்ன புத்தூர் கிராமம் நடுப்பள்ளத் தோட்டம்

கருப்பன் மகன் மாகாளி (55) என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து சுமார் 74 செம்மறி ஆடுகளை வளர்ந்து வந்தார்.. எப்போதும் போல நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் ஆடுகளைப் பட்டியில் ஓட்டிவிட்டு உறங்குவதற்கு வீட்டுக்கு சென்று விட்டார் மீண்டும் காலையில் பட்டியில் வந்து பார்த்தபோது சுமார் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறி விட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் தாசில்தார் அவர்களும் பொன்னாபுரம் வருவாய் ஆய்வாளர் அவர்களும் கிராம நிர்வாக அலுவலர் கால்நடை மருத்துவர் அவர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர் மேலும்
விவசாயி மகாளி பேசும்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நான் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறேன் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை இந்த சம்பவத்தினால் நான் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் மேல முடியாத துயரத்தில் இருப்பதாகவும் அரசு இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்