தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில்,தமிழக வெற்றிக்கழகம் பெரியநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றியம் சார்பில், சுமார்2000க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு மற்றம் நலத்திட்டங்கள் வழங்கும் விழா கோவை தொப்பம் பட்டி பகுதியில் நடைபெற்றது…

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி பெரியநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றியம் சார்பில் தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்தநாளை ஒட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித் தொகை, மருத்துவ முகாம் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கபட்டது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்தநாளை ஒட்டி தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்வேறு இடங்களில் நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் மத்திய ஓன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்தநாள் விழா தொப்பம்பட்டி பிரிவு வேணுகானம் திருமண மண்டபத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், கோவை மாநகர் மாவட்ட செயலாளர், வி சம்பத்குமார் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினர். மேலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையினையும் வழங்கினர்.
தொடர்ந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கினர். மேலும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருபவரும், இந்நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காளிகளை வழங்கியவருமான தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி தினேசின் காரில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியினை அமைச்சர் சம்பத்குமார் பொருத்தினார். மேலும் இவர் பெற்றுள்ள விருதுகளை பெற்ற அமைச்சர் மேடையில் தானும் வழங்குவதாக முன்மொழிந்து அதனை வழங்கினார்.