
கோவை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை இணைந்து ஆரோக்கியமான கோவை என்ற சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை கோவை ஆர்.எஸ்.புரத்தில், உள்ள கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தொடங்கி வைத்தனர்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், 2026–27 ரோட்டரி ஆண்டில் கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளில் தினமும் இலவச உடல்நலப் பரிசோதனை முகாம்களை நடத்தி, பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனைகளை எளிதில் கிடைக்கச் செய்வதும், வாழ்க்கை முறை நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமாகும். இந்த முகாம்களில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, உடல் நிறை குறியீடு இடுப்பு சுற்றளவு, நாடித்துடிப்பு, ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன், கேலக்ஸி ஹெல்த் ஸ்கோர் வழங்கப்பட்டு, ஒவ்வொருவரின் உடல்நல நிலை மதிப்பீடு செய்யப்படும்.
இந்நிகழ்ச்சியில் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜி. ஸ்ரீனிவாசன், தலைமை விற்பனை அதிகாரி எஸ். குருபிரகாஷ், மனித வளம் மற்றும் நிர்வாகப் பிரிவுத் தலைவர் பி.எஸ்.டி. ஷா, மண்டலத் தலைவர்ஏ.வி.எம். ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரோட்டரி மாவட்டம் 3206 சார்பில் 2026–27 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஆர். எஸ். மாருதி மற்றும் உதவி மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் பிரபு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் சார்பில் தலைவர் ரோட்டேரியன் வி. வினோத்குமார், செயலாளர் ரோட்டேரியன் என். புருஷோத்தமன், ரோட்டேரியன் சதீஷ் எம்.எம்.எஸ். ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்வஸ்திக் அறக்கட்டளை சார்பில் அஜய் கலந்து கொண்டு இந்த சமூகநல முயற்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், “நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, நோய் வராமல் தடுப்பதே சிறந்த மருத்துவம்” என்பதை வலியுறுத்தினர். ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த தினசரி இலவச சுகாதார முகாம்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தனர்
