
கோயம்புத்தூர் அப் டவுன் ரோட்டரி கிளப் அமைப்பின் சார்பாக ஆண்டுதோறும் சதுரங்க போட்டி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன் 5வது பதிப்பாக, இந்த ஆண்டுக்கான போட்டி கோவை கணபதி பகுதியில் உள்ள கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ரோட்டோசெக் 2026 எனும் தலைப்பில் நடைபெற்ற இப்போட்டிகள், மாவட்ட அளவில் நடைபெற்றது. கோவை மாவட்ட சதுரங்க சங்கத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இந்த போட்டிகளில் கலந்து கொள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 9 வயதுக்கு உட்பட்டவர்கள், 12 வயதுக்கு உட்பட்டவர்கள், 15 வயதுக்கு உட்பட்டவர்கள், மற்றும் வயது வரம்புகள் இல்லா நிலை என 4 பிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 60 நபர்களுக்கு கோப்பைகளுடன் சான்றிதழ்களும் வழங்க பட்டது. மேலும் 15 சிறுமிகளுக்கான சிறப்பு பரிசுகளும் வழங்க பட்டது. இந்த போட்டிகளில் தலைமை நடுவராக வினோத் குமார், கோவை மாவட்ட செஸ் அசோசியேசன் தலைவர் விஜயராகவன், செயலாளர் தனசேகர், மேலும் கோயம்புத்தூர் அப் டவுன் ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் சதிஷ் குமார், இளைஞர் சேவை தலைவர் ரவிக்குமார், திட்டத்தலைவர் விஜய் மணிகண்டன், செயலாளர் ஞான பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த போட்டிகளை முன்னெடுத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோயம்புத்தூர் அப் டவுன் ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் சதிஷ் குமார் கூறியதாவது.. கோவையில் ஐந்தாவது பதிப்பாக நடைபெறும் இந்த மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டிகளில், பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய போட்டிகள் நடத்தப்படுவதன் நோக்கமே இளம் தலைமுறையினர் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக சதுரங்க போட்டிகளில் ஈடுபட்டு, நாட்டின் பெருமைகளை பறைசாற்ற இளைஞர்களை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கம் என்று தெரிவித்தார்
