கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு .

திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் பண்ணைப்பட்டி பழனிக்கவுண்டன்புதுார் குட்டிக்கரட்டில் குரும்பக்கவுண்டர் ராயர் குல இனமக்களுக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதம் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் முன்பு பக்தர்கள் ஈர உடையுடன் வரிசையாக அமர பூஜாரிக்கு அருள் வந்து பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார். தொடர்ந்து பெண் பக்தர்கள் ஆரோக்கியமாக வாழ பூஜாரியிடம் சாட்டை அடி பெற்றுக் கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.