தேசிய நூலக வார விழாவில், 100 புரவலர்களை சேர்த்து, தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாடப்பள்ளி கிளை நூலகரை, நேரில் அழைத்து பாராட்டிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்


திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது . அன்பழகன் என்பவர் நூலகராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது தேசிய நூலக வார விழா நடைபெற்று வருகின்ற நிலையில் நூலகத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் புரவலர்கள் சேர்க்கும் பணியினை முன்னெடுத்த நூலகர் அன்பழகன், ஒரு வார காலத்தில் தமிழக நூலகத்துறை வரலாற்றில் 100 புரவலர்களை சேர்த்து,₹100000 நிதியாக திரட்டி திருப்பத்தூர் மாவட்ட நூலக துறையிடம் வழங்கினார். தமிழக அளவில் முதலிடம் பிடித்த நூலகர் அன்பழகனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிகழ்வில், திருப்பத்தூர் மாவட்ட நூலக அலுவலர் L. கிளமெண்ட்( பொது) மாடப்பள்ளி கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் பொம்மிகுப்பம் ராதாகிருட்டிணன், நூலக உறுப்பினர் ராம்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.