ஜனநாயக முறை போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு! தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து ஏஐடியூசி மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
ஜனநாயக முறைப்படி போராட்டங்கள், இயக்கங்கள் நடத்துவதற்கு உரிய முறையில் அனுமதி கொடுத்தும் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிகளை அருகில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம் தலைமை வகித்தார். ஏ ஐ டி யூ சி மாநில தலைவர் எஸ்.காசிவிஸ்வநாதன்ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார்.
தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், ஏஐடியூசி மாநில துணைத்தலைவர் எம்.ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தினை ஏஐடியூசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி முடித்து வைத்து உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளின் படி எந்தவொரு கட்சிகளோ, இயக்கங்களோ தங்களின் கருத்துக்களை, கண்டனங்களை தெரிவிக்கின்ற அடிப்படையில், உரிய முறையில் காவல்துறையிடம் விண்ணப்பம் அளித்து போராட்டங்கள், இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது காவல் நிலையங்களில் பேரணி, பொதுக்கூட்டம் , ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவ போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு காவல்துறை உரிய முறையில் பரிசீலிக்காமல், அதற்கு நிபந்தனை விதிப்பது, மறுப்பது உள்ளிட்ட, ஜனநாயக விதிமுறை மீறல்கள் அதிகமாகி வருகிறது. தங்களுடைய உரிமைகளுக்காக போராடும் பொழுது கைது செய்து வழக்கு, சிறைச்சாலை என்ற நிகழ்வுகளும் நடைபெறுகிறது..
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியதற்கு காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளனர், தமிழ்நாடு முழுவதும் உரிமைகளுக்காக போராடுகிறவர்கள் மீது அதிகார மீறல் நடவடிக்கைகள் காவல்துறையால் அதிகமாக கையாளப்படுகிறது. ஜனநாயக உரிமைகளை படிப்படியாக நசுக்குகின்ற, பறிக்கின்ற தமிழ்நாடு காவல்துறையை கண்டித்தும், தமிழ்நாடு அரசு தலையிட்டு காவல்துறையின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் கோ.மணி மூர்த்தி , தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், நுகர் பொருள் வாணிபக் கழக சுமை சங்க மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ஆர்.சேகர், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன், மீனவர் சங்க மாவட்ட செயலாளர் என்.காளிதாஸ், உடல் உழைப்பு சங்க நிர்வாகி சு.பரிமளா, கும்பகோணம் காய்கறி மார்க்கெட் சங்க செயலாளர் ப.சிவக்குமார், மின்வாரிய சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேலு, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், போக்குவரத்து சங்க மாநில நிர்வாகிகள் கே.நேருதுரை, என்.முருகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
