மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தங்க விமானங்கள், கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதனால், இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்த திருப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்தாண்டு செப். 4-ம் தேதி பாலாலயம் நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக திருக்கோயிலின் தங்க விமானங்கள், கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கடந்த இரு நாட்களாக யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காலை 9.30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, புண்யா ஹவாசனம், நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹுதியைத் தொடர்ந்து உபசாரங்கள் நடைபெறும். இதைத்தொடர்ந்து, பகல் 12 மணிக்கு தீபாராதனை, யாத்ரா தானத்துடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தங்க விமானங்கள், கோபுரங்களுக்கு பாலஸ் தாபனம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இந்த பாலாலய நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
