சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர் ,காங்கிரஸ் பேரியக்கத்தின் செயலாற்றல் மிக்க தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி
தஞ்சாவூர் கீழராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு மாநகர செயலாளர் ஆர், பி, முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், ஏஐடியூசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் அஞ்சலி நினைவுரை ஆற்றுகையில் இவிகேஎஸ் இளங்கோவன் அவரது மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்துபவர், துணிச்சல் மிகு, நேர்மை மிக்க குணம் கொண்டவர். மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக இருந்த பொழுது ஜவுளித் தொழில் மேம்பட அரும்பாடு பட்டவர். அந்த காலத்தில் நெருக்கடியாக இருந்த சென்வாட் வரியை ரத்து செய்ய காரணமாக இருந்தவர். பழனி முதல் சாம்ராஜ் நகர் ரயில் பாதை அமைக்க வித்திட்டவர் என மக்கள் பணிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஏஐடியூசி அரசு போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், நுகர்பொருள் வாணிபக்கழக மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், சுமை சங்க நிர்வாகி எம்.எஸ். கிருஷ்ணன், உடலுழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.சுதா,ஆட்டோ சங்க தலைவர்கள் டி.ராஜா, மாதவன் அரசு பண்ணை தொழிற் சங்க மாநிலத் தலைவர் உ.அரசப்பன் மற்றும் அழகு.தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் இபிகேஎஸ்.இளங்கோவன் திரு உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
