கன மழை காரணமாக அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

தமிழக கர்நாடக காவிரி கரையோர பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளிலிருந்து அவ்வப்போது திறக்கப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலூவில் கடந்த இரு தினங்களாக வினாடிக்கு 5000 கன அடியாக நீடித்து வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 8000 கன அடியாக அதிகரித்துள்ளது இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி சினி அருவி மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.