த
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இன்று முன்னாள் மாவட்ட பா.ம.க செயலாளர் அரசூர் ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய செயலாளர் வடுவையன், நிர்வாகிகள் ரகுமான், பிரபு, ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் திரண்டனர்.
பின்னர் முதலமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில்பஸ்சை மறித்து பா.ம.க.வினர் போராட்டம்15 பேர் கைது
