தஞ்சாவூர் சத்யா நடை பயிற்சி சங்கத்தின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.,
இதில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
சங்கத்தின் நோக்கம் சங்க உறுப்பினர்கள் தினம் தோறும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சத்யா நடை பயிற்சி சங்கத்தின் செயலாளர் ஜெயக்குமார் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
