தாராபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த எம் எல் ஏ

இன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட கொண்டரசம்பாளையம் பொதுவீதியில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2024-25 மூலம் ரூ. 17.00 இலட்சம் மதிப்பில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைத்தேன். மேலும் பெஸ்ட் நகர் பகுதியில் அயோத்திய தாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ. 30.00 இலட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தேன். உடன் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், தாராபுரம் ஒன்றிய கழக செயலாளருமான திரு. S.V. செந்தில்குமார் அவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு. E. சசிக்குமார் அவர்கள், இந்நாள்-முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், தாராபுரம் ஒன்றியக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்