திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கல்லால் மண்டையை உடைத்து கள்ளக்காதலனின் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனால் பரபரப்பு!.போலிசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த A.K.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49) அவருடைய மனைவி விஜயா (39) இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்று பேர் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

ஒரு பெண் மாற்றுத்திறனாளி என்பதால் வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயாவின் நடத்தையில் கணவர் கோவிந்தராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விஜயா தன்னுடைய கணவர் கோவிந்தராஜ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் கோவிந்தராஜை மகளிர் போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின் போது தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் அது மட்டுமல்லாமல் இரண்டரை சவரன் தங்க நகை இல்லை இது குறித்து கேட்டால் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்து விஜயாவை அடித்ததாக காவல் நிலையத்தில் கூறியுள்ளார். அதன் பின் போலீசார் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டேன் என விஜயா கூறியதின் அடிப்படையில் ஓசூருக்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று தன்னுடைய மனைவி விஜயாவிற்கு கோவிந்தராஜ் போன் செய்துள்ளார். அப்போது விஜயா போன் பிசியாக இருந்துள்ளது.

தொடர் அழைப்பிற்கு பிறகு போனை அட்ன் செய்த விஜயா பதற்றத்துடன் கணவர்
கோவிந்தராஜியிடம் பேசியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தராஜ் ஓசூரில் இருந்து விரைந்து A.K மோட்டூர் பகுதிக்கு நேற்று இரவு 10.30 மணிக்கு வந்துள்ளார்.

அப்போது கோவிந்தராஜ் வீட்டில் சென்று பார்த்த போது வீட்டில் விஜயா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன் பின் வீட்டில் உள்ள தன்னுடைய மாற்றுத்திறனாளி மகளிடம் அம்மா எங்கே என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண் அம்மா எங்கே போனார் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.பின்னர் விஜயா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கோவிந்தராஜ் மற்றும் அவருடைய மருமகன் பிரசாந்த் ஆகிய இருவரும் விஜயாவை பல இடங்களில் தேடி உள்ளனர்.

அப்போது ஏ.கே. மோட்டர் ஏரிக்கரை பகுதியில் உள்ள வாழை தோப்பில் விஜயாவின் கள்ளக்காதலன் மது அருந்திவிட்டு இருவரும் வாழைத்தோப்பில் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனை பார்த்த கோவிந்தராஜ் ஆத்திரமடைந்து மனைவி விஜயாவை கல்லால் தலையில் தாக்கியுள்ளார். அதனை கண்ட கள்ளகாதலன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.அங்கிருந்த கள்ளக்காதலனின் இருசக்கர வாகனத்தை கோவிந்தராஜ் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

பின்னர் விஜயா கத்தி கூச்சலிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் விஜயாவிற்கு திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைத்தோப்பில் கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கணவன் கல்லால் தாக்கி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது…..