தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பொருட்கள் வாங்கமதுரை மாசி வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்…..

தீபாவளி பண்டிகையை யொட்டி பொருட்கள் வாங்க நேற்று மாசி வீதி களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்னும் 2 தினங்களே இருப்பதால், பொருட்கள் வாங்குவதற்காக மாசிவீதிகள், விளக்குத்தூண் பகுதிகள், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதி களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், அதனை விட அதிகமாக நேற்று ஆயிரக் கணக்கான மக்கள் மாசி வீதி களில் பொருட்கள் வாங்கி செல்வதற்காக சுற்றி வந்தனர்.
மக்கள் கூட்டம் அதிகமாக
இருந்ததால், அந்த பகுதி களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும், கண்காணிக்கும் வகையில் மாசிவீதிகளை சுற்றி சுமார் 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன. அதன் செயல்பாடு கள் குறித்து, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி போலீசார் கண் காணித்து வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராக்களில் சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால், அவர்களை சீருடை அணியாத போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது போல்,மாசி வீதிகளில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக் கப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லும் வகை யில் வழி வகை செய்யப் பட்டது.