“குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு பரிசு”

மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அப்படி வழங்கும் பொதுமக்களுக்கு “தீபாவளி பரிசு வழங்கப்படும்”
எனவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதனடிப்படையில்
வார்டு எண்:4 மதினா நகர் பகுதியில் தூய்மைப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம்
வழங்கியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் திருமதி.இரா.அமுதா, நகர் மன்றத் தலைவர் திருமதி.மெஹரிபா பர்வின், ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கினர்.சுகாதார ஆய்வாளர் திரு.மகாராஜன்,திரு.ரவிசங்கர், தூய்மைப் பணி பரப்புரையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.