ரயில்வேயில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

ரயில்வே துறையில் உள்ள பல்வேறு துறைகளில் ஒன்றாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை செயல்பட்டு வருகிறது. இந்தத் துறை இந்திய அளவில் வருடந்தோறும் அக்டோபர் மாதத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 28 ம் தேதி முதல் நவம்பர் 3 ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சிறப்பு வாரம் அனுசரிக்கப்
படுகிறது. இதை முன்னிட்டு துவக்க நாளன்று மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா தலைமையில் ரயில்வே அதிகாரிகள் ஊழியர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என்.ராவ், வேக சக்தி முதன்மை திட்டம் மேலாளர் கே.ஹரிக்குமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். “தேசத்தை வளப்படுத்த ஒருமைப்பாட்டை வளர்ப்போம்” என்ற கருத்தியல் அடிப்படையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்
படுகிறது. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இதன் முக்கிய நோக்கமாகும். இதற்காக ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி நாடக நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், போன்றவை நடத்தப்படும்.