திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 1063 பயனாளிகளுக்கு 9 கோடியே 32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த போது தான், கூட்டுறவு துவரம்பருப்பு விலை குறைக்கப்பட்டது என அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு.

திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (16.11.2024) நடைப்பெற்ற 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் ஆட்சியர் தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று கூட்டுறவுத்துறை சார்பில் ,1063 பயனாளிகளுக்கு 9 கோடியே 32 லட்சம் மதிப்பில், நலத்திட்டங்களை வழங்கினர்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர்..

நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த போது தான் அப்போதைய முதல்வர் கலைஞரிடம் கூறி 120 ரூபாய் விற்ற துவரம் பருப்பை 30 ரூபாயிற்கு விற்பனை செய்ய உத்தரவு பிறப்பித்தோம், மேலும் கடனை பெற்றவர்கள் கடனை சரியாக திருப்பி செலுத்த வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய ஆட்சியர் தர்ப்பகராஜ்,

   தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டத்தில், தான் மகளீர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடனை 99 சதவிகிதம் திருப்பி செலுத்துகின்றனர் எனப்பேசி மகளீர் சுய உதவிக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்தேவராஜ்.ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்வில்வநாதன். திருப்பத்தூர் நகரச் செயலாளர் எஸ் ராஜேந்திரன். திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர். சந்திரசேகரன். விஷமங்கலம் கூட்டுறவு. குலோத்தகன். விஷமங்கலம் வினோத் குமார். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் மகளீர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்..