ராமநாதபுரம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள்!!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி முஹம்மதியாபுரம் நியாய விலைக்கடை இல்லாமல் பல கிலோ மீட்டர் நடந்து சென்று ரேசன் பொருட்கள் வாங்கும் அவலநிலை தொடர்ந்து இருந்து வந்தது.இந்நிலையில் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பெரியபட்டினம் ரியாஸ்கானை தொடர்பு கொண்டு அப்பகுதி மக்கள் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அவர்களிடம் கோரிக்கை வைக்க வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்று பாம்பன் ஊராட்சி பகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் நியாய விலை கடை அமைக்க வழிவகை செய்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களை நேரில் சந்தித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் முஹம்மது சுலைமான்,விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் மற்றும் ராமநாதபுரம் நகரத் தலைவர் அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.மேலும் முக்கிய கோரிக்கையாக வேதாளை பின்கோடு குறித்து மக்கள் படும் கஷ்டத்தை எடுத்துரைத்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உடனடி தீர்வு காணப்படும் என எம்.எல்.ஏ உறுதி அளித்தார்‌.
பாம்பன் ஊராட்சியில் அரசாணை வெளியிட்டும் 4.5 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் துணை மின் நிலையம் உடனடியாக அமைக்கவும்,வேதாளை ஊராட்சியில் வலையர் வாடி முதல் உள் பேருந்து நிலையம் வரை உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.