தேவிரஅள்ளி அரசு பள்ளியில் வருமுன் காப்போம் சிறப்பு இலவச மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் தேவிரஅள்ளி கிராமத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு இலவச மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது .இந்த முகாமில் மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் எலும்பு முறிவு , கண் , காது, மூக்கு, தொண்டை, தோல் நோய், நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய், பல் மருத்துவம் சம்பந்தமாக பல்வேறு நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டு மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் மருத்துவர்கள் வழங்கினார், இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவி ராஜம்மாள் கரியன், பணந்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை மருத்துவர் விஜயலட்சுமி, கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்,தேன்மொழி, கார்த்திகேயன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கிராமப் பகுதி செவிலியர்கள் மற்றும் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் ,சுதாகர் உள்ளிட்ட 90மருத்துவர்கள் குழுவினர் கலந்து கொண்டு முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
