ராயக்கோட்டை, நவ.22-
ராயக்கோட்டை பகுதியான முத்தம்பட்டி, காடுசெட்டிப்பட்டி, கும்மனூர் போன்ற கிராமங்களில் பப்பாளி தோட்டங்களை சாகுபடி செய்துள்ளனர். பப்பாளி பழங்கள் தரமானதாக இருப்பதால் ஒசூர் மற்றும் பெங்களூர் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். அதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிலையில் பப்பாளி பழங்கள் அளவில் பெரியதாகவும், தரமானதாகவும் இருந்து கடந்த ஒரு மாதமாக யாரும் வாங்க வராததால் மரங்களிலேயே பழுத்தும், அழுகியும் கீழே விழுந்த வண்ணமுள்ளது. இது குறித்து பப்பாளி தோட்ட உரிமையாளர்கள் கூறும்போது ப்பாளி பழத்தை யாரும் வாங்க முன்வராததால் மரங்களிலேயே பழுத்து தொங்குவதாகவும், முன்பெல்லாம் ஒரு கிலோ பப்பாளி பழம் ரூ.15 வரை விற்பனை செய்ததாகவும், இப்போது கிலோ பழத்தை ரூ.5 க்கு கூட வாங்க ஆட்கள் இல்லை எனவும், வெளிநாடுகளுக்கு அனுப்புபவர்கள் கூட வரவில்லை என வருத்தப்பட்டனர்.
பப்பாளி பழம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை
