கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி கோடிக்கரை வழியாக கிராம பகுதிக்குள் தண்ணீர் சுழ்ந்தது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்தவகையில் பாதிக்கப்பட்ட இந்திராபுரி கிராமத்தை சேர்ந்த 70ற்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இண்டியன் ரெட் கிராஸ் அமைப்பினர் ம பெட்சீட், துண்டு, பிரட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸரங்கநாதன் கலந்து கொண்டு தலைமைதாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். போச்சம்பள்ளி இண்டியன் ரெட் கிராஸ் அமைப்பை சேர்ந்த சேர்மேன் திருநாகவுக்கரசு, மற்றும் செல்வம், முரளி, பழனி, தாமரைசெல்வன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திராபுரி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இண்டியன் ரெட் கிராஸ் அமைப்பினர்.
