தஞ்சை தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ள மத்திய மாநில அரசுகளின் வணிகவிரோத சட்டங்களை கண்டித்தும் , வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .இதற்கான ஆயத்த கூட்டம் தஞ்சை மாவட்ட பேரமைப்பின் தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைப்பெற்றது.

தஞ்சை மாவட்ட பேரமைப்பு செயலாளர் ஏவிஎம் ஆனந்த் ,மாநகர அமைப்பாளர் ஜெ.கே.என்கிற ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்து கொள்வது எனவும், வருடா வருடம் உயரும் 6 சதவீத சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும். வணிகவரித்துறை. உணவு பாதுகாப்பு துறை. தொழிலாளர் நலத்துறை. அலுவலர்கள் ஆய்வு என்ற பெயரில் பெரிய அளவில் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும்.

மாநகராட்சி ,நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளில் வார சந்தைகள். தற்காலிக கடைகள். வாகனங்களில் வணிகப் பொருட்கள் விற்பதை தடை செய்ய வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும். மின் கட்டண முறையை மாதந்தோறும் செலுத்திட வகை செய்ய வேண்டும் , உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பாஸ்கர். காமராஜ் காய்கறி மார்க்கெட் தலைவர் எஸ். எஸ் .தர்மராஜ். செயலாளர் எஸ். கே .சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள். பேட்டரி அசோசியன் மோகன் கார்த்திகேயன். குரு சரண். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன். மாவட்ட மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் டாரத்தி காரல் மார்க்ஸ். செயற்குழு உறுப்பினர். முருகேசன். மாவட்ட இணை செயலாளர். ராஜசேகர். விளார் பைபாஸ் சங்கத் தலைவர் சக்கரவர்த்தி. ஜான். கண்ணன் மற்றும் மாவட்ட மாநகர இணைப்புச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .நிறைவாக ஜெயம் ரமேஷ் நன்றி கூறினார்.