தஞ்சை பிள்ளையாய்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா.
தீவிர விஜய் ரசிகரான இவர் சாலை விபத்தில் சிக்கி தனது இடது காலை இழந்தார்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து தனது இரண்டு மகன்களையும் படிக்க வைத்து வருகிறார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி துவக்கி கட்சியின் முதல் மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது
இம்மாநாட்டில் கலந்து கொள்ள தஞ்சையில் உள்ள சாய்பாபா கோவிலில் வழிபாடு செய்து விட்டு சைக்கிளில் புறப்பட்டார்.

190 கி.மீ பயணம் செய்து நாளை பிற்பகல் மாநாட்டு திடலை அடைய திட்டமிட்டு உள்ளார்.
தஞ்சையில் இருந்து புறப்பட்ட அவரை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
