காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை சென்னை தகவல் மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து, குடும்ப நல மருத்துவர் டாக்டர் ஷீலா நாகுஷா மற்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவர் டாக்டர் நித்தியானந்தம் ரவி ஆகியோர் வருகை தந்து
பொதுமக்களை பார்வையிட்டு சிறப்பு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்த மருத்துவ முகாமில்
சர்க்கரை நோய் மாரடைப்பு, இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் (கொழுப்பு), தைராய்டு, ஆஸ்துமா மற்றும் நோய் தொற்று சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும், மார்பு வலி, சளி உற்பத்தி, சத்தம் தரும் மூச்சு, சளியில்
இரத்தம், தூங்கும் போது அதிகரிக்கும் குறட்டை, பகல் தூக்கம் அதிகரித்தல், தூசி ஒவ்வாமை, நுரையீரல் தொற்று, நுரையீரலில் நீர் அல்லது சீழ், காசநோய் / நிமோனியா, தூக்கமின்மை, சுவாசக் கோளாறுகள், நுரையீரல் மற்றும் காற்றுப்பாதைகளில் உட்புற பரிசோதனை போன்ற பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் இந்த முகாமில் B ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள ஆர் பி எஸ், ஹெச்பிஏ 1 சி & இசிஜி ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை சென்னை தகவல் மையத்திற்கு பல துறையைச் சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வாரந்தோறும் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமில் ஏற்பாடுகளை அப்போலோ மருத்துவமனை காஞ்சிபுரம் நிர்வாகிகள் முருகன், ஸ்ரீனிவாசன், மைதிலி ஆகியோர் மிகச் சிறப்பாக செய்து இருந்தார்கள்
