இந்திய எண்டோஸ்கோபிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் (SELSI) தேசியத் தலைவராக கோவை கேட் வே மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.செந்தில் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..
தமிழக அளவில் முதன் முறையாக செல்சி அமைப்பின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற டாக்டர் செந்தில் குமார் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..
அப்போது பேசிய அவர்,இந்தியாவில் உள்ள பிரபல மருத்துவ நிபுணர்கள் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ள செல்சி அமைப்பின் தேசிய தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டதிற்கு இந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்..
இந்திய எண்டோஸ்கோபிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறையில் நவீன தொழில் நுட்பங்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருவதாக குறிப்பிட்ட அவர்,தொழில் நுட்பங்கள் எவ்வளவு வந்தாலும் மனித செயல்பாடுகளின் அனுபவமே அறுவை சிகிச்சைகளை எளிதாக கையாள உதவுவதாக அவர் தெரிவித்தார்.
தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் எண்டோஸ்கோபிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை தொடர்பான மாநாடு,
கருத்தரங்கம்,
கண்காட்சி உள்ளிட்டவற்றை தொடர்ந்து நடத்த உள்ளதாகவும்,
குறிப்பாக அறுவை சிகிச்சைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம் நேரடியாக அனுபவங்களை பெற முடியும் என அவர் தெரிவித்தார்..
தொடர்ந்து செல்சி அமைப்பின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் செந்தில் குமாருக்கு கேட் வே மருத்துவமனை மருத்துவர்கள் பியூஷ் பட்வா,கார்த்திக்,கோபு ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
