ஓலப்பாளையத்தை பரமத்தி வேலூரில் பேரூராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஓலப்பாளையம் ஊராட்சி மோகனூர் தாலுக்காவில் உள்ளது. 4.10.2024 அன்று ஓலப்பாளையம் ஊராட்சியை வேலூர் பேரூராட்சி உடன் இணைத்து புதிய நகராட்சியாக உருவாவதற்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர் ஓலப்பாளையம் ஊராட்சியில் 5710 ஓட்டுக்களை வேலூர் பேரூராட்சியில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமாவிடம் மனு அளித்தனர். அப்பொழுது அவர்கள் கூறுகையில் தாங்கள் கொடுக்கும் இந்த மனுவானது ஏற்கப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட்டால் ஒட்டுமொத்த மக்களும் சாலை மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். ஓலப்பாளையம் ஊராட்சியை புதியதாக உருவாக இருக்கும் வேலூர் நகராட்சியோடு இணைப்பதற்கு பொது மக்களாகிய நாங்கள் கடுமையாக எதிர்ப்பதுடன் வன்மையாக கண்டிக்கிறோம் நகராட்சியுடன் இணைப்பதால் ஊராட்சியில் தேசிய ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வேலையின் மூலம் வருவாய் பெற்று குடும்பம் நடத்தி வருகின்றனர் நகராட்சி ஆவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் இதனை சுற்றியுள்ள விவசாய மற்றும் விவசாய சார்ந்த தொழில்கள் செய்யும் மக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எங்களது கிராம மக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் தன்னிச்சையாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் எங்களது கிராமம் ஊராட்சியாகவே செயல்படுவதற்கு தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்று சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கையெழுத்துக்களை பதிவு செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.