காசா, லெபனான் மீதான போரை நிறுத்த வேண்டும்! இந்திய அரசையும்,ஐநா மன்றத்தையும் வலியுறுத்தி தஞ்சையில் பேரணி- பொதுக்கூட்டம்.

பாலஸ்தீனம்,லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும், பாலஸ்தீனத்தின் இறையாண்மை பாதுகாக்க வேண்டும், இந்திய அரசும், ஐநா மன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகள்,இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் இருந்து பேரணி தொடங்கி,பனகல் கட்டிடம் அருகில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார்.

பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் இரண்டாம் உலக போருக்கு பின்னதாக நாடில்லாமல் அலைந்து திரிந்த யூதர்களுக்கு பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசுகள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி பிரித்துக் கொடுத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் நாடு உருவானதற்கு பிறகு படிப்படியாக வளர்ச்சி பெற்று வல்லரசாக மாறி தனக்கு இடம் அளித்த பாலஸ்தீனத்தை அபகரித்துக் கொள்வதற்கு தொடர்ந்து போரை நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிற யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலைக்காக தொடர்ந்து போராடி வந்தார். அவரது மறைவுக்குப் பிறகும் பாலஸ்தீனத்தின் விடுதலை மற்றும் இறையாண்மைக்காக மக்கள் போராடி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்களை கடுமையாக தாக்கி, இனப்படுகொலை செய்து வருகிறது. பாலஸ்தீன காசா நகரம் முற்றிலும் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. உணவு,தண்ணீர், மருத்துவம், தங்குவதற்கு இடம் இல்லாது காசா மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த லெபனான், ஏமன், சிரியா,ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீதும் கடுமையான ஏவுகணை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது .இதுவரை 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீனம்,லெபனான் மற்றும் அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை கைபற்றுவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும், பண உதவிகளையும் அளித்து வருவதுடன், அரபு நாடுகள் மீதும் குண்டுகளை போட்டு போர் தொடுத்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அமெரிக்கா தனது நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் பாலஸ்தீனம், லெபனான் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும், இந்திய அரசும்,ஐநா மன்றமும் உலக அரங்கில் எடுத்துரைத்து போரை நிறுத்தி, அமைதியை நிலைநாட்டி, பாலஸ்தீனத்தின் இறையாண்மை பாதுகாக்க வேண்டும், அரபு நாடுகளில் உள்ள பதற்றங்களை போக்க வேண்டும் என்று பேரணி, பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், இந்திய பாலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் மாநிலத் தலைவர் கசி. விடுதலைக்குமரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட. செயலாளர் முத்து உத்திராபதி, வடக்கு மாவட்ட துணை செயலாளர் இரா.செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், விசிக மாவட்ட செயலாளர் கோ.ஜெயசங்கர், தமிழ் தேச மக்கள் முன்னணி மாநில செயலாளர் அருண்சோரி, சிறுபான்மை மக்கள் நல குழு மாநில துணை செயலாளர் பி.செந்தில்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ் . எம்.ஜெயினுல் ஆப்தீன்,மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.எம்.பாதுஷா, எஸ்டிபிஐ தொகுதி துணை தலைவர் ஜஹாங்கிர் பாஷா, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் மு.அகமது கபீர், ஜமாத் உலமா சபை தலைவர் எம்.காஜா மைதீன் மிஸ்பாகி, மனித நேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முகமது உசேன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சு. பழனி ராஜன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தங்க குமரவேல் தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநகர செயலாளர் ஆர்.ஜெயக்குமார், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.பி. சேவியர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.கல்யாண சுந்தரம், ஏ ஐ டி யு சி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், சி ஐ டி யு மாநில செயலாளர் சி. ஜெயபால், நம்மாழ்வார் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் க.தவச்செல்வன், மக இக மாநில இணைச் செயலாளர் ராவணன், எழுத்தாளர் சாம்பான், முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றும் துரை.குபேந்திரன், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் எம். முருகையன், திப்பு அம்பேத்கர் பெரியார் நல கூட்டமைப்பு நிர்வாகி நியாஸ் அகமது, விசிக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அ.யோகராஜ், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்டத் தலைவர் அருள், ஆட்டோ சங்க தலைவர்கள் நா.சாமிநாதன், ஆர்.லட்சுமணன், த.தாமஸ் ,ஏ.ஜெயராஜ், இரா.செந்தில்நாதன், வி.மணிகண்டன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சி.ராஜா பொறியாளர் ஜோ.கென்னடி, சமூக ஆர்வலர்கள் ஜானகிராமன், ஞானசம்பந்தம் மற்றும் பெண்கள்,மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர். முடிவில் இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.. பேரணி பொதுக்கூட்ட நிகழ்வுகளை ஏ.ஜெ அப்துல்லா மு.ஆலம்கான், பி.எஸ்.ஹெச்.ரபீக்தீன், தஞ்சை ஐ.தமிழ், ஷேக் அப்துல்லா, அப்துல் கரீம், இம்தியாஸ் அகமது, முகமதுதாஹீர், முகமதுஇக்பால் உள்ளிட்டோர் ஒருங்கினணத்தனர்