த
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தஞ்சை சாந்தி கமலா தியேட்டரில் இருந்து அ.தி.மு.க.வினர் மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர் தலைமையில் மாநகர செயலாளர் சரவணன் முன்னிலையில் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு ரெயிலடிக்கு வந்து அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை திருஞானம், விவசாய பிரிவு இணை செயலாளர் ராஜமாணிக்கம், துணைச் செயலாளர் சிங்.ஜெகதீசன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அறிவுடைநம்பி, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் துரை.வீரணன், மருத்துவப் பிரிவு இணைச்செயலாளர் துரை கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாவித்திரி, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சங்கர், மாவட்ட பொருளாளர் அன்புச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் வெண்ணிலா பாலை ரவி, பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு, புண்ணியமூர்த்தி ,மனோகரன், சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ், குடந்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மண்டல செயலாளர் திருநீலகண்டன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, மகளிரணி சித்திரா அங்கப்பன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மனோகரன், முன்னாள் பகுதி துணை செயலாளர் தாஸ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் நடராஜன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கதிரவன், கவுன்சிலர்கள் கோபால், தெட்சிணாமூர்த்தி, காந்திமதி, கேபிள் செந்தில்,
நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம், ஒன்றிய அவைத் தலைவர் சந்தானம், மாணவர் அணி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
