தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் சாலையோரம் தங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் 12 -ஆம் ஆண்டாக இந்த ஆண்டும் தஞ்சை பெரிய கோவில், புதிய, பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மாரியம்மன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் சாலையோர மக்களுக்கு குளிர்கால கம்பளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் மார்க்கெட்டிங் திரு. சிவக்குமார் அவர்கள், பொது மேலாளர் (பொறுப்பு ) திரு . செல்வ பாண்டி அவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வழங்கினார்கள். இதில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.
தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாககுளிர்கால கம்பளி வழங்கப்பட்டது.
