
மதுரை, நவம்பர் 16, 2025: ஆலன் கரியர் இன்ஸ்டிட்யூட் பிரைவேட் லிமிடெட் ஞாயிற்றுக்கிழமை ராஜா முத்தையா மன்றத்தில் தனது ஆண்டு கொண்டாட்டமான SOPAN 2025–ஐ நடத்தியது. ஆலன் மதுரையில் நடைபெற்ற இந்த ஆண்டு SOPAN விழா, 9 சிறப்பு பெருமைக்குரிய விருந்தினர்களும் 20 பள்ளி முதல்வர்களும் கலந்து சிறப்பித்த பாராட்டு விழாவாக இருந்தது. SOPAN என்பது பல்வேறு ஒலிம்பியாட்கள், IIT JEE, மற்றும் NEET (UG) தேர்வுகளில் தகுதி பெற்ற மதுரை மாணவர்களைப் பாராட்டும் ஆலனின் ஆண்டு கொண்டாட்டமாகும்.
உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி, மார்கண்டேய கட்ஜு, தமிழ்நாடு முன்னாள் செயலர், எம். கருணாகரன் (ஓய்வு IAS) , கலெக்டர் PAG, சந்திரசேகர் , விக்ரம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல், மதுரை,மேலாளர், டாக்டர் வீர ராஜகுமார், மதுரை மெடிக்கல் கல்லூரி, டீன், டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், பெரம்பலூர், தலைவர்,டாக்டர் சிவசுப்பிரமணியம், BNI மதுரை, MD , ஹரி பிரசாத், கல்வி குழும பள்ளிகள், தலைவர், டாக்டர் செந்தில் குமார் மற்றும் ஜெயப்ரியா வித்யாலயா கல்வி நிறுவனங்கள், இயக்குநர், நாகசாமி சுரேஷ் தினேஷ் – ஆகியோர் நிகழ்வை நேரில் கண்டு சிறப்பித்தனர்.
ஆலன் நடத்திய SOPAN, மதுரை பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 533 மாணவர்கள், பள்ளி முதல்தர மாணவர்கள், TALLENTEX முதல்தர மாணவர்கள், நீட்(யுஜி) 2025–இல் தேர்ச்சி பெற்ற 25 வளரும் மருத்துவர்கள், 4 ஐஐடி ஜேஇஇ 2025 மாணவர்கள், 4 என்ஐடி மாணவர்கள் மற்றும் 2 ஐஐ எஸ்இஆர் மாணவர்களைப் பாராட்டும் தளமாக மாறியது.SOPAN மதுரையில் Toppers Talk ஒன்று நடத்தப்பட்டது. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்ற ஆதித் சஞ்சீவ்.ஏ, ஷண்முக பிரியன். எல், புவனிகா ஸ்ரீ.பி மற்றும் சுபன் கார்த்திக்.என், ஐஐடி பாம்பே–யில் இடம் பெற்ற சந்தோஷ்.டி, மேலும் என்ஐடியில் சேர்ந்த 2 மாணவர்கள் சஞ்சய்.எஸ் மற்றும் கவுதமன்.டி ஆகியோர் பங்கேற்று தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
ஆலன் தெற்கு மண்டலங்களின் துணைத் தலைவர், மகேஷ் யாதவ் கூறுகையில், மதுரையின் திறமை, IIT மும்பை, IIT சென்னை, IIT காரக்பூர், IIT காந்திநகர் முதல் NIT திருச்சி மற்றும் NIT காளிக்கட் வரை, IISER மோகாலி மற்றும் திருவனந்தபுரம் வரை உள்ள தேசிய புகழ்பெற்ற சிறப்புத் திறன் நிறுவனங்களில் இடம்பிடிப்பதும், அதனுடன் 25 இளம் மருத்துவர்கள் இணைவது கொண்டாடத்தக்க ஒரு அளவுகோலை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றிக்கான புகழ் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், ALLEN கல்விக் குழுவுக்கும் செல்கிறது. ALLEN மதுரை அணியிடம் நான் உயர்ந்த எதிர்பார்ப்புகளை வைத்துள்ளேன், மேலும் வரும் கல்வியாண்டில் அவர்கள் தங்களின் முந்தைய சாதனையை மீறும் என நம்புகிறேன்” என்றார்.
