
கோவை பந்தயசாலையில் உள்ள காஸ்மோ க்ளபில் இன்று இந்திய ஜவுளி சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்பொழுது இம்மாநாட்டுக்குழு தலைவர் ராஜ்குமார், இந்திய ஜவுளி சங்கத்தின் தென்னிந்திய பிரிவு தலைவர் சத்தியநாராயணா, மாநாடு அமைப்பாளர் ராமலிங்கம் இந்திய ஜவுளி சங்கத்தின் கோவை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கூறியதாவது…
அமேரிக்கன் ஆப் டெக்ஸ்டைல் கெமிட்ஸ் அன்ட் கலரிட்ஸ் அமைப்புடன், இந்திய ஜவுளி சங்கத்தினர் இணைந்து 78வது இந்திய ஜவுளி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடானது வரும் 21, மற்றும் 22ம் தேதி ஆகிய இரு நாட்கள் கோவை, நீலாம்பூர் பகுதியில் உள்ள லீ மெரிடியன் உணவகத்தில் நடைபெற உள்ளது என்றனர். இந்த மாநாட்டின் வாயிலாக, ஆடைகள் மற்றும் ஜவுளி நுகர்வில் வளர்ந்து வரும் உலகலாவிய போக்குகள், செலவுகள், கழிவு மேலாண்மை, மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றிற்கான தொழில்நுட்ப போக்குகள், மேம்பட்ட உற்பத்தி முறைகள் மூலமாக ஜவுளி உற்பத்தியை மேம்படுத்தும் புதிய வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கருவின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறும் எனவும், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டு தங்களது உரையை நிகழ்த்த உள்ளதாவும், மேலும் இம்மாநாட்டின் வாயிலாக, தலைமை விருந்தினராக, எல். எம். டபிள்யூ தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு, பல்லவா குழுமத்தின் செயல் இயக்குநர் துரை பழனிசாமி, எல். எஸ் மில்ஸ் லிமிடெட் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் இவர்களுக்கு, இன்டஸ்ட்ரீஸ் எக்சலன்ஸ் எனும் சிறப்பு விருதுகளும் வழங்க பட உள்ளது என தெரிவித்தார். மேலும், திருப்பூர் கே. எம். நிட்வேர் நிறுவனத்தின் தலைவர் கே. எம். சுப்பிரமணியன் மாநாட்டு மலரை வெளியிட உள்ளதாகவும், அதன் முதல் பிரதியை மாநாட்டு குழுத்தலைவர் ராஜ்குமார் பெற்று கொளள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் பிரீமியர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக ஸ்ரீனிவாசன், சிவராஜ் ஸ்பின்னிங் மில்ஸ் சார்பாக சிவராஜ் பிரபு, சுலொச்சனா காட்டன் மில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்க உள்ளதாகவும், இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்கக் உள்ளதாகவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.,
