திருப்பத்தூரில் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர்..

திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் இன்று (17.06.2025) நடைப்பெற்ற வர்த்தக சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பங்கேற்று, புதியதாக பதவியேற்ற வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூர்யா குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா பொதுக்குழு உறுப்பினர் அரசு. வர்த்தக சங்கத் தலைவராக சி.கே.சி.ஜெயசீலன், வர்த்தக சங்க இயக்குனர் ரவிச்சந்திரன் வரவேற்பு ஆற்றினார்.

வணிகர் சங்க பேரமைப்பு செந்தில் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.என்.டி.கே.சுபாஷ், நகர மன்ற உறுப்பினர் பிரேம்குமார், மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.