திருப்பத்தூர் அருகே மூன்று தலைமுறைகளாக உள்ள இடத்தை போலிப் பத்திரம் செய்து பெண்களை ஆபாச வார்த்தை கூறி அச்சுறுத்தல் விடும் திமுக கந்திலி ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ஆவல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் ஆவல்நாயகன் பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் மற்றும் குண்டி மாரியம்மன் கற்சிலை மூன்று தலைமுறைகளாக உள்ளது.அந்த இடத்தில் சட்டவிரோதமாக போலியாக பத்திர பதிவு செய்து ஆலயம் இருந்த இடத்தை அகற்றி திமுகவை சேர்ந்த கந்திலி ஒன்றிய செயலாளர் முருகேசன் வணிக கடை அமைத்து வருகிறார்.


மேலும் இதுகுறித்து ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து அவரிடம் கேட்டால் பெண்களை ஆபாச வார்த்தைகளால் பேசுவதும் மேலும் தான் ஆளுங்கட்சி சேர்ந்தவன் என்னை எதுவும் செய்ய முடியாது என்பது போல் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுவதாகவும் எனவே போலியாக பத்திர பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுவிட்டது.